வவுனியாவில் காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 29, 2020

வவுனியாவில் காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் காரைக்கவி கந்தையா பத்மாநந்தனின் பத்து நூல்களின் அறிமுக விழா வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் இடம்பெற்றது.

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி தி.ஜெயகாண்டீபன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில்  தேசிய கல்வியற் கல்லூரி முன்னாள் பீடாதிபதி க.சுவர்ணராஜா, ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவர் ஜெகநாதன் சுதாநாதன், கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் பெருந்தலைவர் வே.இறைபிள்ளை மற்றும் கல்வியளாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததோடு, இந்நூல்களின் அறிமுக உரையினை  வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி பொ.சத்தியநாதனால் நிகழ்த்ததப்பட்டது.

நூல்களின் நயவுரைகளை கலாநிதி தமிழ்மணி அகளங்கன், தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி நேலோமி அன்ரனி குரூஸ், தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் ச.பவானந்தன் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது. ஏற்புரையினை நூலாசிரியர் காரைக்கவி கந்தையா பத்மானந்த் ஆற்றினார்.