ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, February 19, 2020

ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை அனுமதி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த முன்மொழிவை சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இந்நிலையில், மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளிற்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலகிக்கொள்ளும் திட்டம் குறித்துநாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.