மக்கள் ஆணையின் பிரகாரமே ஐ.நா.வின் தீர்மானங்களிலிருந்து விலக தீர்மானித்தோம் என இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளித்த ஆணையின் பிரகாரமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னைய அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளிலிருந்தும் விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னைய அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல.
மாறாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளிலான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் ஏற்கனவே கூறப்பட்டிருக்கின்றது.
அதற்கு அமையவே இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.