கிணற்றில் வீழ்ந்து முதன்முறை தப்பித்து இரண்டாவது முறை உயிரிழந்த சிறுமி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, February 3, 2020

கிணற்றில் வீழ்ந்து முதன்முறை தப்பித்து இரண்டாவது முறை உயிரிழந்த சிறுமி

அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

ஜெகதீஸ்வரன் அட்சயா (வயது 5) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

வெளி முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமற்போயுள்ளார் .வீட்டில் இருந்தவர்கள் சிறுமியை தேடிய போது பாதுகாப்பற்ற கிணற்றில் காணப்பட்டுள்ளார். உறவினர்கள் சிறுமியை மீட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .

உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .

மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

இந்தச் சிறுமி கடந்த மழைக்காலத்தின் போது கிணற்றில் வீழ்ந்த நிலையில் உறவினர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டு இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது