சிறிலங்காஅவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (2) இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
கைவிடப்பட்ட சுரங்கத்திற்குள் விழுந்த இரண்டு கோழிகளை மீட்க முயன்றதில் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
சுரங்கத்திற்குள் விழுந்த இரண்டு கோழிகளை மீட்க முயன்றவர், சுரங்கத்திற்குள் மயக்கமடையும் நிலைமையை எட்டியதும், அவரை காப்பாற்ற மூவர் சுரங்கத்திற்குள் இறங்கியுள்ளனர். அதில் இருவர் உயிரிழந்தனர். ஏற்கனவே சுரங்கத்திற்குள் மயங்கியவரும் உயிரிழந்தார். காப்பாற்ற இறங்கியவர்களில் ஒருவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, அவிசாவளை வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
17, 25, 27 வயதானவர்களே உயிரிழந்துள்ளனர்.