வவுனியா, புளியங்குளம், பரந்தன் பகுதியில் இன்று மாலை வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
வவுனியா, புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் உள்ள பரந்தன் பகுதியில் யானை ஒன்று வீதிக்கு வந்தது. இதனால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்த பயணிகள், வாகன சாரதிகள் எனப் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
இதேவேளை, அவ்வப்போது மாலை வேளைகளில் குறித்த வீதிக்கு யானை வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பகுதிக்கு வரும் காட்டு யானைகளைக்கட்டுப்படுத்த மின்சார வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கேட்டு நிற்கின்றனர்.