விவசாயின் மகன் விவசாயியாகதான் வருவான் என்ற கூற்றை முற்றிலும் முறியடித்து முயற்சி தந்தால் எதையும் செய்ய முடியும் என்று மிக குறுகிய காலத்தில் பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்ற அதை நிரூபித்து காட்டியுள்ளார் இரத்னேஸ்வரன் செந்தில்.
யார் இந்த இரத்னேஸ்வரன் செந்தில்?
காங்கேசன்துறை இளவாலை எனும் சிற்றூரில் ஒரு ஏழை விவசாயியான இரத்னேஸ்வரன் வசந்தி தம்பதியினருக்கு 1983.06.27 ஆம் திகதி அன்று தவப்புதல்வனாக பிறந்தவர் தான் இந்த இரத்னேஸ்வரன் செந்தில்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை இளவாலை யா/ரோமன் கத்தோலிக்க ஆண்கள் பாடசாலையில் ஆரம்பித்தார்.அதனைத் தொடர்ந்து இடைநிலைக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியை யாழ்/இளவாலை புனிதகென்றியரசர்கல்லூரியிலும் பயின்றார்.
அதன்பின்னர் அவரது பட்டப்படிப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகமானி(BBA) முதலாம் தரத்தில் தெரிவுசெய்யப்பட்டார்.
அத்துடன் தனது மேல் பட்டப் படிப்பை முடித்து விடாமல் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்த முதுகலை மாணி (பொது நிர்வாகம்) MA (Pub Ad) Zambia mansfield பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக இரத்னேஸ்வரன் செந்தில் நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து தமது திறமைக்கு அங்கீகாரமாக கிடைத்த முகாமைத்துவ உதவியாளராக(வட மாகாணத் திறைசேரி)2011.04.08 தொடக்கம் 2011.11.15, வரை பதவி வகித்தார். பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தராக (வடமாகாண திறைசேரி)2011.12.15 தொடக்கம் 2012.02.02 வரை பணியாற்றினார்.
தொடர்ந்து இலங்கை நிர்வாக சேவையில் முதலாம் தரத்தில் சித்தி பெற்று பயிற்சியின் பின்னர் 2012.12.03 பொறுப்பு வாய்ந்த நிர்வாகத் துறையில் கால் பதித்தார்.
அதனை தொடர்ந்து 2013.08.21 ஹொரவபொத்தானை பிரதேச உதவி செயலாளராக பொறுப்பேற்று தற்போது 2020.02.03 பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்று மிக குறுகிய காலத்தில் பல பதவி உயர்வுகளைப் பெற்றார் என்றால் அது மிகையாகாது.
விவசாயின் மகன் விவசாயியாகதான் வருவான் என்ற கூற்றை முற்றிலும் முறியடித்து முயற்சி தந்தால் எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியது மட்டுமல்லாது தனது தாய் தந்தையின் கனவை நிறைவேற்றிய செல்வப்புதல்வன் மேலும் வாழ்வில் வெற்றி பெற எல்லோருக்கும் பொதுவான இறைவன் வழிவகுக்கட்டும்.