நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்பு எந்தவொரு புதிய அரசியல் கட்சிகளின் பதிவிற்கும் தற்போது சாத்தியம் இல்லை என தெரியவந்துள்ள போதும் கட்சிகள் தமது கட்சியின் பெயரை மாற்றம் செய்ய வழங்கிய விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுமென தெரியவந்துள்ளது.அத்துடன் அவற்றிற்கான புதிய பெயர் சின்னம் அங்கீகரிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய அரசியல் கட சிகளின் பதிவிற்காக சந்தர்ப்;பம் அளித்து அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டது. இதற்கமைய நாடு முழுவதும் இருந்து 62 அரசியல் கட்சிகள் புதிய பதிவிற்கு விண்ணப்பித்திருந்தன.
இவ்வாறு விண்ணப்பித்த அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான சட்ட ஏற்பாடுகள் ஆராய்து அதற்கான முன்னெடுப்புக்கள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆயினும் இம்மாதம் முடிவுற ஜந்து தினங்கள் மட்டுமே பணிநாள் உள்ளதோடு அடுத்த மாதம் இரு பணி நாட்களின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.இதனால் அதற்கு முன்பு கட்சிப் பதிவு நடவடிக்கைகளிற்கு எந்த சாத்தியமும் இல்லை என தெரியவருகின்றது.
இந்நடவடிக்கையினால் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பெயரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியென மாற்றம் செய்யும் முயற்சிக்கு சிக்கலில்லையென தொடர்புடைய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.