கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி இன்று பகல் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி ஏ-09 வீதியில் இன்று (19-02-2020) காலை 09 -30 மணியளவில் வங்கிக்கு சென்று விட்டு துவிச்சக்கர வண்டியில் வர்த்தக நிலையத்திற்கு திரும்பிக் கொண்ருந்த வர்த்தகரை பரந்தனில் இருந்து முறிகண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பஸ் மோதியதில் படு காயமடைந்த வர்த்தகர் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் மயில்வாகனம் யோகராசா என்பவரே உயிரிந்துள்ளார்.
இதையடுத்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் முன்னெடுத்து வருவதுடன் பஸ் சாரதியை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது