கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ம் திகதியன்று அதிகாலை மொன்றியல், பார்க் அவென்யு மற்றும் மில்டன் வீதி சந்திப்புக்கு அன்மித்த பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் டாக்ஸி மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சின்னதம்பி சிவகுமார் (63) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவரது இறுதிக் கிரியைகள் நாளை (29) இடம்பெறும்.