கிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி! வெளியான அதிர்ச்சி தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, February 27, 2020

கிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி! வெளியான அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சியில் 16 வயது நிரம்பிய பெண் பிள்ளை உறவினர்கள் நான்கு பேரினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் எட்டாம் கட்டடை பிரதேசத்தில் மாவீரரின் 16 வயது பெண் குழந்தையை சொந்த சித்தப்பா மற்றும் அவனுடன் சேர்ந்து மூன்று நபர்கள் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துவரும் ஈன செயல் நடைபெறுகின்றது

முன்னாள் மாவீரரின் மனைவியை யுத்தத்தில் இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளி திருமணம் செய்துள்ளார்.

இவர் கிளிநொச்சி ஆனைவிழுந்தன் பகுதியில் துவிச்சக்கர வண்டி திருத்தும் நிலையம் ஒன்றை நடத்திவரும் நிலையில் தனது மனைவியின் பிள்ளைக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமையை ஊடகங்களுக்கு தெரிவித்ததுடன்,

தற்போது பாட்டியுடன் வசித்துவரும் சிறுமியை சித்தப்பாவும் உறவு முறையான மேலும் மூன்று நபர்கள் தாயுடன் சேரவிடாது தடுத்து வைத்து தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்துவதாகவும் இவர்களிடம் இருந்து சிறுமியை மீட்டு தருமறு தாயும் முன்னாள் போராளியும் கேட்டுள்ளார்.