தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை இன அழிப்பே’ என கூறி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் 1101 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மூன்று ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டதையடுத்து ஊர்வலமாக மணிக்கூட்டு கோபுரத்தை செனறடைந்து அங்கிருந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது ‘தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை இன அழிப்பே’, ‘தமிழ் தேசியவாதம் மற்றும் நிரந்தர பாதுகாக்கப்பட்ட தமிழ் தாயகத்தினை நம்பும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் சுமந்திரனையும் அவர்களை சார்ந்தவர்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும்’ என்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
\