யாழ்ப்பாணம் தீவக பிரதேசங்களான வேலணை, ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.