நுவரெலியா - மஸ்கெலியா சாமிமலை ஓயாவிலிருந்து ஆனொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரவுன்ஸ்விக் தோட்டத்தை சேர்ந்த சிலர் இன்று (27) காலை 10 மணியளவில் குறித்த ஆற்றுக்கு நீராடச் சென்ற போது ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸார், சடலத்தைக் மீட்டுள்ளனர்.
பிரவுன்ஸ்விக் தோட்டத்தின் ராணித் தோட்டத்தில் வசித்து வந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சூரியகுமார் என்பவேரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.