என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை, நான் அப்பாவிடம் செல்கிறேன், கணவர், தாய் ஆகியோரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். மகனை நன்றாக பார்க்குமாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அரியாலை பகுதியை சேர்ந்த 31 வயதான நகுலேஸ்வரன் நிரோஜினி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
கணவரும், தாயாரும் வேலைக்காக சென்ற நிலையில் மகன் கல்வி நிலையத்திற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.