கிளிநொச்சியில் படையினர் உட்பட 21 பேர் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 8, 2020

கிளிநொச்சியில் படையினர் உட்பட 21 பேர் கைது

வட தமிழீழம் , கிளிநொச்சி – தர்மபுரத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின்பேரில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 5 படையினர், 3 தமிழ் சிவிலியன்கள், 13 சிங்கள சிவிலியன்களுமாக 21 பேர் கைது செய்யப்பட்டனரென  சிங்கள பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக  சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்