நாடாளுமன்றில் வாய்மூல விடையை எதிர்பார்த்து நாடாளுமன்ற உறுபபினர்களினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, இன்று முதல் முறையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்கவுள்ளார்.
நாடாளுமன்றம் இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது.
இதன்போது, வாகன போக்குவரத்து சட்டத்தின் சில ஒழுங்குவிதிகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணி முதல் 1.30 வரையான காலப்பகுதியில் அதற்கான நேரம் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.