கொரோனா உருவாக காரணம் இதுதான் – தமிழக மாணவன் வெளியிட்ட முக்கிய தகவல்! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, February 5, 2020

கொரோனா உருவாக காரணம் இதுதான் – தமிழக மாணவன் வெளியிட்ட முக்கிய தகவல்!

இறைச்சியை வாரக்கணக்கில் குளிரூட்டியில் (freezer) வைத்து விற்பனை செய்வதால் தான் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம் என சீனாவில் கல்வி கற்கும் தமிழக மாணவரொருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள ஜிங்ஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டு மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வரும், அபிஷேக் என்பவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் சீன மக்கள் அன்றாட உணவில் இறைச்சியை அதிகம் பயன்படுத்துகின்றதாக குறிப்பிட்ட அவர் இறைச்சியை வாரக்கணக்கில் குளிரூட்டியில் வைத்து விற்பதாலும் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

சீனாவில் வுகான் மாநிலத்தில் மட்டும்தான் இந்த பாதிப்பு உள்ள நிலையில் தாங்கள் இருந்த ஜிங்ஜியாங் மாகாணம் வுகான் பகுதியில் இருந்து 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில், 490க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் , இந்த வைரஸ் நோய் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.