சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து விபசாரம் – 8 வெளிநாட்டு பெண்கள் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, February 11, 2020

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து விபசாரம் – 8 வெளிநாட்டு பெண்கள் கைது!

 சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 8 வெளிநாட்டுப் பெண்களை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.

பம்பலபிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர்களை இவ்வாறு கைது செய்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சுற்றிவளைப்பின்போது இந்த விபசார நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த சீன பெண்ணும் சிக்கியதாகவும் அத்திணைக்கம் தெரிவித்துள்ளது.

கைதான 8 பெண்களும், மிரிஹான விஷேட தடுப்பு மையத்துக்கு அழைத்து செல்லப்ப்ட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர்களை நாடு கடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.