முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவத்தால் தாயும் மகனும் கைதாகிய சம்பவம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 8, 2020

முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவத்தால் தாயும் மகனும் கைதாகிய சம்பவம்!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்து மேலும் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பூட்டியிருந்த குறித்த வீட்டை பொலிஸார் சோதனை செய்த நிலையில் சுமார் மூன்று கிலோவுக்கும் அதிகமான வெடிமருந்து பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் இவ்வாறு வெடி பொருட்களிலிருந்து மருந்துகளை பிரித்தெடுத்து வியாபாரம் செய்த ஒருவராக இருக்கவேண்டும் எனவும் இவ்வாறு குண்டு ஒன்றிலிருந்து மருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட நிலையிலேயே குண்டு வெடித்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்த வெடி மருந்துகள் வியாபாரத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் காயமடைந்தவரின் தாயாரான குறித்த வீட்டின் உரிமையாளர் மற்றும் காயமடைந்தவரின் சகோதரனாகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் அவர்களுடைய வீடுகள் சோதனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.