இலங்கையில் சீனப் பெண் மாத்திரம் கொரோன தொற்றுக்குள்ளனதாகவும், அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்த தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதாத் சமரவீரா, இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பில் முன்னெடுக்கப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீனப் பெண் எப்போது வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற உறுதியான திகதி இன்னும் தீர்மனிக்கப்படவில்லை.
இந் நிலையில் நாடு முழுவதும் 172 பேர் கொரோனா தொற்றுக்கிலக்கான சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்றுக்கிலக்காகவில்லை என்பது கண்டறியப்பட்ட பின்னர் அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.