யாழில் சட்டவிரோத விடுதி சுற்றிவளைப்பு: 17 வயது தாயும் பச்சிளங் குழந்தையும் மீட்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, February 11, 2020

யாழில் சட்டவிரோத விடுதி சுற்றிவளைப்பு: 17 வயது தாயும் பச்சிளங் குழந்தையும் மீட்பு

யாழ்.நகருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியில் இன்று சுற்றிவளைக்கப்பட்ட விபச்சா ர விடுதியிலிருந்து 17 வயதான சிறுமியும் அவருடைய பச்சிளம் குழந்தையுமே மீட்கப்பட்டிருக்கி ன்றனா். மீட்கப்பட்ட சிறுமியும் குழுந்தையும் பாதுகாக்கப்பட்டுள்ளனா்.

யாழ்.மாநகரசபையின் பதிவு இல்லாமல் இயங்கிய குறித்த விபச்சார விடுதி இன்று மாலை சுற்றி வளைக்கப்பட்டபோது அங்கிருந்த பலா் தப்பி ஓடியிருந்தனா். எனினும் ஒரு பெண்ணும், ஆணும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ள

பெண் 17 வயதான சிறுமி எனவும், திருமணமாகாத அவாிடம் பச்சிளம் குழந்தை ஒன்று இருந்த தாகவும் தற்போது சிறுமியும், பச்சிளம் குழந்தையும் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள் ளதாக யாழ்.பிரதேச செயலக அதிகாாிகள் கூறியிருக்கின்றனா்.

மேலும் சிறுமியின் கணவா் என ஒருவா் தன்னை அடையாளப்படுத்தியுள்ளாா். அவரும் தற்போது பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றுடன் இணைந்து விடுதியும் இயங்கி வந்துள்ளது.

எனினும் அந்த விடுதி பதிவு செய்யப்படவில்லை. அந்த விடுதியில் கலாசார சீரழிவு நடவடிக்கை இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலக கலாசார பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன்

தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பொலிஸாா் இணைந்தே விடுதியை சுற்றிவளைத்துள்ள னா்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் ஒரே இடத்தைச் சேர்ந்த போதும் பெண் திருமண வயதையடையாதால், அவர்கள் இருவருக்கும்

பதிவுத் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. அதனால் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த விடுதியில் வைத்து அந்த சிறுமி மூலம் அதிகளவு பணத்தை ஆண் பெற்றுவந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபை பதிவு செய்யப்படாத விடுதிகளை இயங்க அனுமதித்துள்ளமையே இவ்வாறான கலாசார சீரழிவுகளுக்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்