கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீனப் பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பிலுள்ள உணவகம் ஒன்று கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 100க்கும் மேற்பட்டவர்கள் உ யிரிழந்துள்ள நிலையில், 5000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றிலும், கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இதனால் சீன நாட்டவர்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொழும்பிலுள்ள உணவகம் ஒன்று சீனர்களுக்கு புதுக்கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது, சீனப் பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என்கிற அறிவித்தல் பலகை அந்த உணவகத்தின் நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.