திருகோணமலை, நீதிமன்ற வீதியில் நெடுங்காலமாய் இயங்கி வந்த விபச்சாரம் நிலையம் பிராந்திய விஷத் தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று சுற்றி வளைக்கப்பட்டது.
சுற்றி வளைப்பின் போது விடுதி நடத்துனர் உட்பட திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பிராந்திய விஷத் தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் திருகோணமலை நகர் மனையாவலியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் என தெரிவிக்கப்படுகின்து.
கை செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் வசம் ஒப்படைத்தாக பிராந்திய விஷத் தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.