வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் சிறிலங்கா இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுவரும் நிலையில், சோதனை சாவடிகளில் மக்களை இராணுவம் பு கைப்படம் பிடிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் (A-9) பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கு ம் நிலையில், பயணிகள் பேருந்துகள் தொடக்கம் தனியாா் வாகனங்கள் வரை சகல வாகனங்க ளும் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன், மக்கள் வாகனங்களில் இருந்து இறக்கிவிடப்பட்டு
சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதன்போது சோதனைக்குட்படுத்தப்படும் மக்களை சிறிலங்கா இராணுவத்தினா் புகைப்படம் எடுப்பதாக மக்கள் கூறுகின்றனா். இன்று அதிகாலை ஓமந்தை மத்திய கல்லுாாிக்கு முன்பாகவுள்ள சோதனை சாவடியில்,
பொதுமக்களை இராணுவம் புகைப்படம் எடுத்ததாக மக்கள் கூறுகின்றனா்.