கைவிலங்குடன் ஓட முயற்சித்த கைதியால் கலவரம் : இருவர் காயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 28, 2020

கைவிலங்குடன் ஓட முயற்சித்த கைதியால் கலவரம் : இருவர் காயம்

கிளிநொச்சியில் சிறிலங்கா பொலிஸாரின் பிடியிலிருந்து தப்ப முயன்ற சந்தேகநபரால் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சந்தேகநபரின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளனர்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில், குறித்த சந்தேகநபரை அழைத்துச் சென்றபோது குறித்த சந்தேகநபர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. குறித்த மோட்டார் சைக்கிள் வீதியின் பாதசாரி ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி காயமடைந்துள்ளார்.

அத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் சந்தேகநபரும் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.