சிங்கலே, ராவண பலய என்ற சிங்கள பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த மதகுருமார்கள் அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம் செய்தனர்.
பௌத்த கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ராவண பலகாய அமைப்பின் தலைவர் இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரோ மற்றும் சிக்கலே அமைப்பைச் சேர்ந்த மடில்லே பஞ்ஞாலோக தேரோ ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.
குறித்த குழுவினர் நேற்று (சனிக்கிழமை) இரவு 7 மணியளவில் அங்கு சென்று ஆலயம் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டதோடு, பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்படுள்ள பௌத்த விகாரையைச் சேர்ந்த அமைப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் .