முன்னணி,ஈபிஆர்எல்எவ் தலைவர்கள் பற்றி அக்கறையில்லை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, January 20, 2020

முன்னணி,ஈபிஆர்எல்எவ் தலைவர்கள் பற்றி அக்கறையில்லை!

முன்னணியின் தலைவராக யார் இருக்கவேண்டும் என்பது பற்றியோ ஈபிஆர்எல்எவ் இற்கு யார் தலைவராக இருக்கவேண்டும் என்பது தொடர்பிலோ நாம் அக்கறை கொண்டிருக்கவில்லை.கருத்தும் தெரிவிககவில்லை.

ஆனால் அக்கட்சியினரோ கூட்டமைப்பு தலைமை பற்றி கவலைப்படுகின்றனர்.தலைவர் மாற்றம் கூட்டமைப்பில் இப்போது இல்லை. அதற்கான சூழ்நிலை உருவாகவும் இல்லை எனத் தெரிவித்துள்ள அக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமை மாற்றம் குறித்து வெளிவரும் செய்திகளையும் அடியோடு நிராகரித்துள்ளார்.

அதேவேளை தலைமை மாற்றம் ஏற்படுவதாக இருந்தால் கூட அது கூட்டமைப்பின் உள் விவகாரம். மற்றக் கட்சிகளுக்கு அதில் எந்தவிதமான ஈடுபாடுகளும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

குறிப்பாக சுரேஸ்பிரேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப் அமைப்பிற்கு யார் தலைவராக இருக்க வேண்டுமென்று நாங்கள் யாரும் எந்தக் காலத்திலும் கருத்துச் சொல்வது கிடையாது. அதே போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தலைவர் யாராக இருக்க வேண்டுமென்றும் நாங்கள் ஒரு காலமும் சொல்வதில்லை.

ஏனெனில் அது அவர்களுடைய கட்சி விவகாரம். ஆகையினாலே கூட்டமைப்பிற்குள் இல்லாதவர்கள் கூட்டமைப்பின் தலைவராக யார் வர வேண்டும் யார் வரக் கூடாது என்று சொல்வதெல்லாம் வேடிக்கையான விசயங்கள். அது அவர்களோடு எந்தவிதத்திலுமே சம்மந்தமில்லாத விசயங்களாகத் தான் இருக்கின்றன.

இதே வேளை தலைமைப் பதவியை தருவதற்கான அல்லது தலைமைப் பதவியை நாங்கள் ஏற்றுக் கொள்வதற்கான சூழ்நிலை உருவாகவில்லை. ஆகையினால் இப்போது இதற்கான கேள்வி எழ வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.