கத்திமுனையில் மிரட்டி பெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு – பூநகரியில் சம்பவம் - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, January 22, 2020

கத்திமுனையில் மிரட்டி பெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு – பூநகரியில் சம்பவம்


பேருந்துக்காக காத்திருந்த குடும்ப பெண்ணின் தாலிக் கொடிணை முகமூடி கொள்ளையர்கள் வாளை காட்டி அச்சுறுத்தி பறித்துச் சென்ற சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது.

இன்று புதன்கிழமை காலை 7 மணியளவில் பூநகரி, பள்ளிக்குடா பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. பூநகரியில் இருந்து பருத்தித்துறைக் வருவதற்காக காலை நேரம் பள்ளிக்குடா பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் மேற்படி பெண்மணி காத்திருந்துள்ளார்.

அச்சமயம் கார் ஒன்றில் பூநகரிப் பகுதியில் இருந்து வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு முகங்களை முகமூடி அணிந்து மறைத்தவாறு காரிலிருந்து இறங்கி பெண்மணியின் கழுத்தில் நீளமான வாள் ஒன்றினை வைத்து அச்சுறுத்தி அவரிடமிருந்த பத்தரை பவுண் நிறையுடைய தாலிக்கொடியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்