நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்களை பிரதம நீதியரசரிடம் முன்வைத்து, நீதித்துறையை அவமதித்த அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கொள்கை அறிக்கை தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பொலிஸாரால் வெளியிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ஊடகங்களால் வெளியிடப்படுவதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.