யாழில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய மாணவி! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, January 8, 2020

யாழில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய மாணவி!

யாழ்.கொக்குவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொக்குவில் கிழக்கு கொக்குவில். எனும் முகவரியில் வசித்துவரும் 20 வயதுடைய மகேஸ்வரன்_கஜேந்தினி என்றமாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தந்தை இல்லாத நிலையில் தாயாரும் சகோதரி ஒருவரும் சகோதரன் ஒருவருடன் வசித்து வந்த நிலையில் நேற்றைய தினம் வவுனியாவில் உறவினர் ஒருவருடைய மரண நிகழ்விற்காக தாயாரும் சகோதரர்களும் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில் அம்மம்மாவின் பாதுகாப்பில் இருந்த இவர் இன்றைய தினம் தொலைபேசியில் அழுதபடி உரையாடிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து அம்மம்மா அருகில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்று திரும்பி வந்தபோது வீட்டில் குறித்த யுவதி இல்லாத நிலையில் அயல் வீடுகளில் விசாரித்துவிட்டு வந்து மலசலகூடத்தை பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது