யாழில் குடும்ப நிகழ்வுகளில் அழையாமல் நுளையும் சுமந்திரன்! காரணம் என்ன? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, January 18, 2020

யாழில் குடும்ப நிகழ்வுகளில் அழையாமல் நுளையும் சுமந்திரன்! காரணம் என்ன?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவருமே பிரச்சார நடவடிக்கையில் தீவிரம் காட்டினாலும், யாழ் மாவட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன் அதிதீவிர பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இதன்படி, யாழ் மாவட்டத்திலுள்ள கிராமிய சங்கங்கள் அனைத்தையும் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார் சுமந்திரன்.

கிராமிய அமைப்புக்கள் அனைத்திற்கும் எம்.ஏ.சுமந்திரனால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களை சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அண்மைய வாரங்களில் யாழில் தனிநபர்களின் குடும்ப நிகழ்வுகளில் அழையாமல் கலந்து கொள்வதிலும் சுமந்திரன் மும்முரம் காட்டி வருகிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு சரிந்து வரும் நிலையில் இப்படி வாக்கு சேகரிக்கும் அவல நிலை கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ளது என மக்கள் கூறுகின்றனர்.