தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம் ! கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, January 20, 2020

தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம் ! கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை

நானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இந்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கொலை செய்த நபருடைய மனைவிக்கும் பலியான நபருக்கும் இடையில் தகாத உறவு இருப்பதை அறிந்து கொண்ட நபர், அப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த வேளையில் குறித்த நபரை தாக்கியுள்ளார்.

இதன் போது சம்பவ இடத்தில் குறித்த நபர் பலியானதோடு, கொலை செய்த நபர் தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலியான நபர் புத்தளம், வென்னப்புவ பகுதியில் வசிக்கும் 43 வயதான ஏ.ஜி. சசேந்திர பெர்ணான்டோ அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நுவரெலியா கைரேகை அடையாளப் பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், மோப்ப நாய்களை விட்டு ஆராய்ந்துள்ளனர்.

அத்துடன் , நீதவானும் மரண விசாரணைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட உள்ளதுடன், கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருக்கும் நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.