தமிழ் மக்களுக்கு சாப்பாடும் தண்ணீருமே முக்கியமானவை என்ற அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து, முழு தமிழினத்தையும் கொச்சைப்படுத்துகின்றது என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகப்பிரதானிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியதாக சி.வி.கே.சிவஞானம் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக சோற்றுக்கும், தண்ணீருக்கும் போராடவில்லை எனவும், அரசாங்கத்தின் பொருளாதார தடை இருந்த காலத்திலும் தமிழர்கள் இந்த மண்ணில் வாழ்த்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.