பேருந்துக்குள் வெடி குச்சிகள்; இருவர் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, January 18, 2020

பேருந்துக்குள் வெடி குச்சிகள்; இருவர் கைது

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை நேரியகுளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் நேற்றிரவு (17) இரவு வழிமறித்த இராணுவம் மேற்கொண்ட சோதனையின் போது பேருந்துக்குள் இருந்து 51 ஜெலக்னெட் வெடி குச்சிகள் மீட்கப்பட்டுள்ளது.

பொதியினை யாரும் உரிமை கோராத நிலையில் பேருந்தையும், அதன் சாரதி மற்றும் நடத்துனரையும் இராணுவத்தினர் கைது செய்து செட்டிக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இருவரிடமும் செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.