நாரம்மல-குளியாபடிய வீதியின் தங்கொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், முச்சக்கர வண்டியுடன் வேன்று ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரொம்பாவ-கொரொக்கலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுடன் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.