நானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்த நபருடைய மனைவிக்கும் சம்பவத்தில் உயிரிழந்த நபருக்குமிடையில் தகாத உறவுமுறை இருப்பதை அறிந்துகொண்ட கொலையாளி அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் புத்தளம் வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஏ.ஜி.சசேந்திர பெர்ணாண்டோ (வயது -43) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.