தனியார் பேருந்தில் இருந்து 51டைனமெற் வெடிபொருள் மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, January 18, 2020

தனியார் பேருந்தில் இருந்து 51டைனமெற் வெடிபொருள் மீட்பு!

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் நேரியகுளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு 7 மணியளவில் வழிமறித்த இராணுவம் அவ்விடத்தில் சோதனைகளை மேற்கொண்ட போது பஸ்ஸில் டைனமெற் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

பஸ் உரிமை கோரப்படாமலிருந்த பொதியினை பரிசோதனை செய்த போது குறித்த பொதிக்குள்ளிருந்து 51டைனமெற் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

யாரும் உரிமை கோராமையினால் பஸ்ஸையும், பஸ் சாரதி மற்றும் நடத்துனரைம் இராணுவத்தினர் செட்டிக்குளம் பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்