யாழில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 22, 2020

யாழில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் – மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் காயங்களுடன் சடலம் ஒன்று இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்தோடு குறித்த சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் இருப்பதனால் இது கொலையாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் குறித்த நபர் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.