தனியார் பேருந்தில் இரகசிய முறையில் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட 170 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் புத்தளம் பிரிவினர் இன்று (புதன்கிழமை) காலை மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், யாழ்ப்பாணம், கொடிகாமம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டியில் இருந்து கொழும்புக்குப் பயணித்த தனியார் பேருந்தை, பாலாவி சந்திப்பில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் மற்றும் கடற்படை புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதன்போது கேரளா கஞ்சா சாக்குகளை இரகசியமான முறையில் பேருந்தின் ஆசனங்களுக்கு கீழ் பகுதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட போது அவற்றைக் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸ் போதைப் பொருள் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.