ரஞ்சனின் குரல் பதிவுகளை விசாரணை செய்வதற்காக பத்து விசேட குழுக்கள் நியமிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, January 22, 2020

ரஞ்சனின் குரல் பதிவுகளை விசாரணை செய்வதற்காக பத்து விசேட குழுக்கள் நியமிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை விசாரணை செய்வதற்காக பத்து விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியகட்சகர் ஜாலிய சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த குரல் பதிவுகளின் பிரதிகள் கிடைக்கப் பெற்றதும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குரல் பதிவுகளின் பிரதியை பெற்று, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த குரல் பதிவுகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மற்றும் முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்க ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

தற்போது பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நீதவான் தம்மிக்க ஹேமபாலவிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது