உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகாயமடைந்த யாழ். யுவதி உயிரிழப்பு.! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 31, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகாயமடைந்த யாழ். யுவதி உயிரிழப்பு.!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது வட தமிழீழம் ,  யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதான நிரின் ப்ளோரிடா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இவர் படுகாயமடைந்திருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 9 மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது