கொரோனா தொற்று? உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, January 31, 2020

கொரோனா தொற்று? உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தில் விமானப் பணிப்பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என சந்தேகிக்கப்படும் நபர்களை அனுமதிக்க தனியான விடுதி ஒன்று தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களை பரிசோதிக்கும் மருத்துவர்கள் குழு மற்றும் தாதியர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஆடைகள் இல்லை என நீர்கொழும்பு வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.