யாழ்.வருகை தரும் அஸ்கிரிய பீடாதிபதி? - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, January 25, 2020

யாழ்.வருகை தரும் அஸ்கிரிய பீடாதிபதி?

இந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்தில் சைவ புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முதல்நாள் நிகழ்ச்சியில் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்ன தேரர் கலந்து கொள்கிறார்.

புத்தர் சிலைகளையும் புத்த பன் சாலைகளையும் அமைப்பதால் மட்டுமே புத்த சமயத்தையோ புத்தரின் கருத்துக்களையோ பரப்ப முடியாது. அந்தந்த ஊர் மக்கள் ஒப்புதலின்றி புத்தர் சிலைகளை எவரும் எந்த இடத்திலும் வைக்கக்கூடாது என வணக்கத்துக்குரிய அத்துரலியே இரத்தன தேரர் கூறியுள்ளார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கண்டியிலிருந்து வரும் வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீடாதிபதி கலந்துகொள்கிறார். யாழ்ப்பாணம் நாகவிகாரை வணக்கத்துக்குரிய புத்தபிக்கு  விமல் தேரர் அவர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்.