முடிவுக்கு வந்தது கிளிநொச்சி போராட்டம்? - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, January 25, 2020

முடிவுக்கு வந்தது கிளிநொச்சி போராட்டம்?

அதிகரித்து ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் முன்னெடுத்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டிருந்தது.

அவரது உண்ணாவிரதம் மூன்றாவது நாளாக தொடர்ந்து செல்கின்ற நிலையில் இன்று மாலை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளரின் உறுதி மொழிகளை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.

இதனிடையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் தூண்டுதலிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கூட்டமைப்பு தரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.