ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண் உள்ளிட்ட இரு பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்படுள்ளது என்று இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை இன்று (26) மாலை வெளியிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்தளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சீன பெண்ணும் இலங்கை ஆணும் அங்கொடை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.