புதுக்குடியிருப்பில் சிறிலங்கா கடற்படை மற்றும் பொலிஸ் இணைந்து தேடுதல் வேட்டையில் வீதிக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு.
வட தமிழீழம் , முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா கடற்படை மற்றும் பொலிஸ் நடாத்திய சோத னை நடவடிக்கையின்போது வீதிக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொ ருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றது.
எஸ்.எப்.ஜி. 87 ரக கைக் குண்டுகள் 16 மற்றும் 75 மில்லி மீட்டர் ரக கைக் குண்டுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கைக் குண்டுகள் யுத்த காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட கைக் குண்டுகள் அனைத்தும் கிளிநொச்சி விசேட குண்டு செயலிழக்கும் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
முக்கிய குறிப்பு:
தமிழீழத்தில் எடுக்கும் வெடிபொருட்கள் எல்லாம் தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என்று தனது படையை வைத்து பிரச்சாரம் செய்ய முனைவது சிங்கள அரசின் உளவியல்சார் போர் ,.விடுதலை புலிகளின் பெயரை அவ்வப்போது இப்படியான விடையங்களில் பொருத்தி சர்வேதேச பார்வையில் விடுதலை புலிகளை தீவிரவாதிகளாக இன்றளவும் மறைமுகமாக பிரச்சாரம் செய்து இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலை மறைக்கும் முயற்சியே இதுவாகும் , குறித்த வெடிப்பொருட்கள் சிறிலங்கா அரசாங்கமே புதைத்தும் வைத்திருக்கலாம் .தமிழ் மக்களுக்கு தனியரசை கட்டமைத்து தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமே .