நுவரெலியாவிலுள்ள சீதையம்மன் ஆலயத்தை புதுப்பிக்க 5கோடி இந்திய ரூபாய் நிதியை இந்திய அரசு வழங்கவுள்ளது.
குறித்த ஆலயத்தின் புனரமைப்புப் பணியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இந்திய மத்திய பிரதேச கலாசார துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்தே நுவரெலியா பகுதியிலுள்ள சீதையம்மன் ஆலயத்தை மேம்படுத்த மத்திய பிரதேச அரசின் நிதியில் இருந்து 5கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். எனவே இதற்கான பணிகளை தொடக்குங்களென அமைச்சர் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மத்திய பிரதேச, மாநில பா.ஜ.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரிமான ராகேஷ் சிங் தெரிவித்துள்ளதாவது, “அறிவிப்புகளை வெளியிடுவதில் முதல்வர் கமல்நாத் திறமையானவர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளிக்க மாநில அரசு மறுத்து வருகிறது. அவர் மேலிட தலைவர்களை திருப்திப்படுத்த இவ்வாறு செயற்படுகிறார்.
இதனை மறைக்க தற்போது பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்த மாநில அரசு சீதையம்மன் ஆலயத்துக்கு நிதி வழங்க முடிவு செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.