பிரபாகரன் மிகப்பெரும் ஆளுமை என்று புகழ்ந்த மகிந்த! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, January 18, 2020

பிரபாகரன் மிகப்பெரும் ஆளுமை என்று புகழ்ந்த மகிந்த!

உலகில் மிகச்சிறந்த தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் தற்கொலை தாக்குதல் படகுகளை உருவாக்கியவா் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரன். தன்னிடமிருந்த சிறிய ரக விமானங்கள் மூலம் மிக துல்லியமான தாக்குதல்களையும் நடத்தி உலகை வியக்கவைத்தவா்.
மேற்கண்டவாறு   சிறிலங்கா  பிரதமா் இனப்படுகொலையாளன்  மகிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றாா்.

 தென் தமிழீழம் , திருகோணமலை- சீனன்குடா  சிங்கள விமான படைத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண் டவாறு கூறியிருக்கின்றாா்.

முக்கிய குறிப்பு :

தமிழர்களின் நாடு சிங்கள பேரினவாத பிடியிலிருந்து  விலகி தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்கின்ற அடிப்படையிலே தமிழர்களுக்கென்று ஒரு நாடு  கட்டமைக்கவே     தமிழீழ தேசியம்   ( தமிழீழ விடுதலைப் புலிகள்  அமைப்பு)  தமிழீழத் தேசியத் தலைவரால்  உருவாக்கப்பட்டது ,  இதில்  தற்கொலை தாக்குதல்  எனபது இல்லை , தமிழ் மக்களுக்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்யும் சிங்கள பேரினவாத இராணுவத்திற்கு பதிலடி கொடுக்க   மாவீரர்கள் முழு ஆத்மார்த்தமாக விரும்பி தற்கொடையாளராக  உருவெடுத்து எதிரிக்கு பதிலடி கொடுத்தார்கள்  என்பதே உண்மை