யாழ்.குருநகர் மேற்கு பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் விசனம்! - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, January 28, 2020

யாழ்.குருநகர் மேற்கு பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் விசனம்!

யாழ்.குருநகர் மேற்கு, ஐஸ் பிலான்டட் வீதிப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் தாம் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அப்பகுதிமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட மாநகரசபை மற்றும் அப்பகுதி கிராம சேவையாளர் இடமும் முறையிட்ட போதிலும், தமக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயத்தை கருத்தில் கொண்டு, தமக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.